(மன்னார் நிருபர்)
(20-08-2021)
நாடளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை (20) இரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையிலான 10 நாட்கள் நாட்டை முழுமையாக முடக்க அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை மாலை அறிவித்துள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நகர பகுதி நோக்கி விரைந்துள்ளனர்.
திடீர் என முடக்க நிலை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மரக்கறி சந்தைகள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் என்பன மக்கள் கூட்டத்தால் நிறைந்துள்ளது.
தொடர்ச்சியாக நகர பகுதியில் மக்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.