(25-08-2021)
முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இழப்பு அதிர்ச்சியை தந்துள்ளது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அமரர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் ஜீவன், இவரின் இழப்பு பேரிழப்பாகும். கடந்த அரசாங்கத்தில் பல முக்கிய பதவியை வகித்தவர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சி காலத்தில் இணைந்து பயணித்தவராவார்.
இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் நல்ல நண்பராவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
1983 ஆண்டு காலத்தில் அரசியலில் பிரவேசித்த அமரர் மங்கள சமரவீர இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் மலையக பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்திகளுக்கும் ஆதரவு வழங்கியிருந்தார்.
அன்னாரின் ஆத்ம சாந்தியடை பிராத்திக்கின்றோம். என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ.காவின் உயர்மட்ட குழு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.