ரொறன்ரோ மாநகர சபையால் நேற்று வியாழக்கிழமை விடுக்கப்பட்ட புதிய அறிவிப்பின் படி ரொறன்ரொ நகரசபையால் கோவிட்-19 க்கு எதிரான முழுமையாக தடுப்பூசி போட மறுக்கும் ஊழியர்கள் பணி நீக்கம் மற்றும் ஏனைய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக அறிவித்தது
ரொறன்ரோ நகரசபையின் 37,000 ஊழியர்களுக்கு நகரத்தின் கட்டாய கோவிட்-19 தடுப்பூசி செலுத்த வேண்டிய அறிவிப்பு வெளியான பின்னர் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய மருத்துவ காரணங்கள் உட்பட சில வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அதே வேளையில், இந்த கட்டாய அறிவிப்புக்கு இணங்காத ஊழியர்கள் பணிநீக்கம் உட்பட ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உள்ளாகலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
ரோறன்ரோ மாநகர சபையில் புதிதாக பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பணியமர்த்தப்படுவதற்கான நிபந்தனையாக முழுமையாக தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும் தற்போதைய அறிவிப்பு வலியுறுத்தியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏதிர்வரும் அக்டோபர் 30-க்குள் முழு தடுப்பூசி தேவைப்படும் இந்த அறிவிப்பானது ரொறன்ரோ நகரசபை ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் முழுநேர மற்றும் பகுதிநேரமாக பணியாற்றும் அனைவருக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது