மன்னார் நிருபர்
(29-08-2021)
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை பாதுகாப்பு படையினரின் மனித வலுவுடன் துரித கதியில் ஆண்களுக்கான கொவிட்- 19 இடை நிலை சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குறித்த வைத்தியசாலையில் இடம் பெற்று வரும் வேலைத் திட்டங்களை இராணுவ அதிகாரி நேற்று(28) சனிக்கிழமைக்கு மாலை நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இதன் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியத்தை ரி.வினோதன் மற்றும் குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
எவ்வாறாயினும் குறித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வழமை போல் அதே இடத்தில் செயற்படும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மேலும் தெரிவித்தார்..