“கனேடியர்களை முன்னோக்கி செல்லும் எனது சரியான பாதையில் பயணிக்கின்றேன். எனவே எதிர்ப்பாளர்களின் கூச்சல்களைக் கண்டு நானும் எமது கட்சிவேட்பாளர்களும் ஒருபோதும் பின் வாங்கப் போவதில்லை,” என்றுகனடியப் பிரதமரும் லிபரல் கட்சியின் தலைவருமான ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் தனது சக வேட்பாளர்கள் சிலருடன் சென்றிருந்தார். அப்போது அவருக்கு எதிராக பதாகைகளைத் தாங்கிய வண்ணம் மோசமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்த வண்ணமும் அங்கு நூற்றுக்கு உட்பட்ட மக்கள் கூடி கோசமிட்டனர். மிகுந்த அவமரியாதையான வார்த்தைகளைக் கையாண்ட அந்த கூட்டத்தினர் அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளையும் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அவமதித்தார்கள்
ட்ரூடோ அவர்கள் கேம்பிரிட்ஜ் நகரில் தற்போதைய முக்கிய பிரச்சனையாக உள்ள காலநிலை மாற்ற நடவடிக்கைகளை அறிவிப்பதற்காகவும் தொழிற்சாலைகளுக்கு சுத்தமான தொழில் நுட்பங்கள் மற்றும் கனடாவில் விற்கப்படும் அனைத்து பயணிகள் வாகனங்களும் 2035 க்குள் பூஜ்ஜிய வெப்ப வெளியேற்றத்தைக் கொண்டவையாகவும் இருக்கவேண்டும் என்றும் திட்டமிடப்படுவதாகக் குறிப்பிட்டார்.
அப்போது அங்கு நிலைமைகள் சற்று பதட்டம் நிறைந்த வையாக இருந்ததனால், பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்வை ரத்து செய்வேண்டியிருந்தது என்றும் கூறப்படுகின்றது அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை நிகழ்வு – ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது – ட்ரூடோவிற்கு எதிராககோசம் எழுப்பி எதிர்ப்பைக் காட்டியவர்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காக அதற்கேற்ப வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எனினும் எதிர்ப்பு கோசங்களை எழுப்பிய வண்ணன் அவர்களில் சிலர் பின்னர் விமான நிலையத்திற்கு ஊடகப் ஜஸ்ரின் ட்ரூடோ பயணித்த பேருந்தைப் பின் தொடர்ந்தனர்.
மேலும் இன்னும் சில இடங்களிலும் எதிர்ப்புக் குரல் எழுப்பிய வண்ணம் பலரும் மற்றும் தடுப்பூசி எதிர்ப்பு எதிர்ப்பாளர்கள் – சிலர் நாடு முழுவதும் ஜஸ்ரின் ட்ரூடோவைப் பின் தொடர்வதாகவும் இதனால் நாடு முழுவதுமான தேர்தல் – பிரச்சாரத்தின் மூன்றாம் வாரத்தில் லிபரல் கட்சியின் தலைவராக இவருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பை அதிகரிப்புத் தொடர்பாகவும் மத்தியகாவல் துறை ஏற்பாடுகளைச் செய்து வருவதாககவும் கூறப்படுகின்றது.
இந்தவேளையில் கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமான சிபிசி நிருபர் டிராவிஸ் தன்ராஜ் ஜஸ்ரின் ட்ரூடோவிடம் முன்வைத்த ஒரு கேள்வியில் ஒரு கறுப்பினப் பாதுகாப்பு அதிகாரி மீது உறுப்பினர் மீது இனவெறிச் சாயல் கொண்ட சொற்கள் எறியப்பட்டதாகவும், ஒரு பெண் பொலிஸ் அதிகாரியிடம் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட கூச்சலையும் பற்றிக் கேட்டார்.
“இந்தத் தேர்தலில் தேர்வின் முக்கியத்துவத்தை இவ்வாறான தாக்குதல்களும் எதிர்ப்புக் குரல்களும் எங்களுக்கு இன்னும் காட்டுகின்றன. இனவாதத்தையும் பெண்களுக்கு எதிரான தாக்குதல்களையும் முறியடிக்க வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது என்று அந்த சிபிசி செய்தியாளருக்கு ஜஸ்ரின் ட்ரூடோ கூறினார்.
அவர் அங்கு மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்குபதிலளிக்கையில் “நாங்கள் இனங்களுக்கு இடையிலான பிரிவு, வெறுப்பு, இனவெறி மற்றும் வன்முறையில் ஆகியவற்றில் வீழ்த்தப்படுகின்றோமோ? அல்லது நாங்கள் சொல்கிறோமா, ‘இல்லை, உங்களுக்கு என்ன தெரியும், என்று சத்தமிட்ட வண்ணம் அவர்கள் எங்கள் முன்வந்தால், அது நம்மை பின் வாங்கச் செய்யும் வேலையைச் செய்யாது நாம் பார்க்க வேண்டும். எது சரி என்பதன் பக்கம் எழுந்து நிற்பதை கனேடியர்கள் இந்த தேர்தலில் சொல்லுவதற்கோ அல்லது அதை நீருபிப்பதற்கோ அவர்கள் அச்சமடையமாட்டார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.