(30-08-2021)
ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் எத்வட்டேவத்த பிரதேசத்தில் இன்று (30) கேகாலை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது ஆயுதங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் துப்பாக்கிகள் 3, ஏனைய இரு துப்பாக்கிகள், கை விலங்ககுகள் 2, 22 வெடிமருந்துகள் , 1 கிராம் 330 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் என்பன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடைய எத்வட்டேவத்த ,ரம்புக்கனை பிரதேசத்தை சேர்ந்தவராவார். கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.