(மன்னார் நிருபர்)
(30-08-2021)
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (30) மதியம் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளருமான வணபிதா அருட்கலாநிதி எஸ் சந்திரகுமார் அவர்களினால் கையளிக்கப்பட்டது.–
மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் ஊடாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதி ராஜா மற்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
-நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில்,ஒரு தொகுதி முகக்கவசம் மற்றும் கிருமி தொற்று நீக்கி ஆகியவை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
-இதன் போது ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த வணபிதா அல்பிரட் மணிமாறன்,வணபிதா எஸ்.பத்திநாதன், உதவி அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.