மன்னார் நிருபர்
(31-08-2021)
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யுத்த காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் முப்படையினராலும் கடத்தப்பட்ட, கையளிக்கப்பட்ட உறவுகளின் நீதியை வலியுறுத்தி நேற்று (30) திங்கட்கிழமை இரவு மன்னார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இணைந்து மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் தீபம் ஏற்றி கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம் பெற்றது
கொரோனா முடக்க நிலை காரணமாக வீடுகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளுக்கு நீதி வேண்டியும், காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு விரைவில் இந்த அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் என கோரியும் வீடுகளில் தீபம் ஏற்றி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பத்தினர் கவனயீர்ப்பு நிகழ்வினை முன்னெடுத்தனர்.
அதே நேரம் காணாமல் ஆக்கப்பட்டோர் விடையத்தில் சர்வதேசம் தலையிட்டு யுத்த காலப்பகுதியிலும் அதற்கு முன்னரும் இலங்கை அரசாங்கத்தினால் கடத்தப்பட்ட மற்றும் சரணடைந்த தங்கள் உறவுகளுக்கு நிஜாயத்தை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.