மன்னார் நிருபர்
(31-08-2021)
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வவுனியா இறம்பைக்குளம் “ஈஷி ‘ மிஷன் ஆலயத்தின் நிதி உதவியில் இன்று செவ்வாய்க்கிழமை(31) மாலை கொரேனா பாதுகாப்பு உபகரணங்கள் ஒரு தொகுதியும் சலவை இயந்திரம் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது .
மன்னார் நகரில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையின் அவசியத் தேவை கருதி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வவுனியா இறம்பைக்குளம் “ஈஷி” மிஷன் ஆலயத்தினால் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் ஆலயத்தின் பிரதான போதகரினால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் உதவி பணிப்பாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது .