31-8-2021
வடமராட்சியில் இன்று 100 வயது முதியவர் உள்பட இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 100 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலம் மந்திகை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட்-19 தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது.
அல்வாய் மேற்கு திக்கத்தைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட்-19 தொற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 245ஆக உயர்வடைந்துள்ளது