அண்மையில் நோவா ஸ்கோசியா மாகாணத்தில் நடைபெற்றதேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள மாகாண கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் முதலமைச்சர் டிம் ஹ_ஸ்டன் நேற்று முன்தினம் புதன்கிழமை தனது மாகாணத்தின் சுகாதார அமைப்பை சீர்திருத்துவதற்கான தனது தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்தும் வகையில் நோவா ஸ்கோசியா சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியை பதவி நீக்கம் செய்தார் மற்றும் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவையும் கலைத்தார்.
முதலமைச்சர் டிம் ஹ_ஸ்டன் மற்றும் அவரது புதிய அமைச்சரவை பதவியேற்ற ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை இடம் பெற்றுள்ளுத என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
ஆகஸ்ட் 17அன்று நடைபெற்ற மாகாணத் தேர்தலில் தனது கொன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை அரசாங்கத்தை வென்ற போது, நோவா ஸ்கோசிய மக்கள் தமது கட்சிக்கு வாக்களித்து மாற்றத்திற்கானதங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளதால் முதலமைச்சர் ரிம் ஹ_ஸ்டன் நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட “தலைமைத்துவக் குழுவை” அறிமுகப்படுத்தினார்.
மாகாணத்தின் கொன்சர்வேர்ட்டீவ் கட்சியின் பிரச்சாரம் கிட்டத்தட்ட நிர்வாகத்தை சரி செய்வதில் மட்டுமேகவனம் செலுத்தியது என்றும் முதல்மைச்சர் ரிம் ஹ_ஸ்டன் தனது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாக நிர்வாகத்தை சீர் செய்வதில் இருக்கும் என்று மீண்டும் மீண்டும் கூறினார்.
“இதுமாற்றத்திற்காக அல்ல” என்றும் முதலமைச்சர் ரிம் ஹ_ஸ்டன் செய்தியாளர்களிடம் கூறினார். “நோய்த் தொற்று உள்ளகாலத்தில் பல விடயங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது … நாங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் அனைத்தும் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவது பற்றியது.” என்று அவர் தெரிவித்தார்.
14 உறுப்பினர்களைக் கொண்ட மாகாணத்தின் இயக்குநர் குழு ஒருதன்னார்வ அமைப்பாக மட்டுமே இருந்தது, அது இனிமேலும் தொடர்ந்து இயங்காது. இதேவேளையில் பதவிநீக்கம் செய்யப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பிரெண்டன் கார் சுமார் தனது வருடாந்த ஊதியமாக 400,000 டாலர்களைப் பெற்றார் என்று மாகாணத்தின் சுகாதார அமைச்சு உறுதி செய்தது.
“மக்கள் சுகாதாரப் பாதுகாப்பை அணுகுவதை உறுதி செய்வதில் எமது கவனம் செலுத்துவேண்டி இருக்கிறது” என்றுரிம் ஹ_ஸ்டன் கூறினார். மாகாணத்தின் புதிய மருத்துவுநிர்வாகக் குழுவிற்குகரேன் ஓல்ட்ஃபீல்ட் என்பவர் இனிமேல் தலைமை தாங்குவார் – அவருக்கு சுகாதாரப் பாதுகாப்பு அனுபவம் இல்லை. அவர் முன்னாள் கொன்சர்வேர்ட்வ் கட்சியின் முதலமைச்சர் ஜான் ஹாமின் அலுவலகத்தில் பணியாற்றினார். மற்றும் ஹாலிஃபாக்ஸ் துறைமுகத்தை நிர்வாகம் நடத்தும் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார் என்றும் முதலமைச்சர் ரிம்ஹ_ஸ்டன் தெரிவித்தார்.
மேலும் மாகாணத்தின் முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து மாகாணத்தின் மருத்துவ பகுதி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில் “ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கு குடும்ப மருத்துவர்களைத் தேடுகிறார்கள், இந்த மாகாணத்தில் மருத்துவர்களுக்கு பல வெற்றிடங்கள் உள்ளன மருத்துவதாதியர்கள் மருத்துவர்கள் என 20 சதவிகிதம் பற்றாக்குறையாக உள்ளது, இது எங்கள் முதியோர்கள் வாழும் நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது,” என்றும் அவர் கூறினார். நோவா ஸ்கோசியா மாகாணம் ஏனைய மாகாணங்களுடன் போட்டித்தன்மையுடன் இருக்க,மருத்துவத்துறைக்கு ஆட்சேர்ப்பு, முக்கியமானதாகும். அதை நாம் நெறிப்படுத்தப்பட வேண்டும்.
முன்னணி சுகாதார நிபுணர்களிடம் இருந்து கேட்கும் வகையில் புதிதாக நியமிக்கப் பெற்ற மருத்துவ குழு செப்டம்பர் 20 முதல் 23 வரை எமது மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்று ஹ_ஸ்டன் கூறினார். மேலும். இந்த மருத்துவக் குழு ஒரு கறுப்பின உறுப்பினர் மற்றும் பூர்வீக உறுப்பினரைக் கொண்டிருப்பதால் மாகாணத்தின் மக்கள் தொகையின் மாறுபட்ட பிரதிபலிப்பைக் கொண்டு வரும் என்றும் குழுவின் உறுப்பினர்ராங்கின் கூறினார்.