ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் செப்டம்பர் மாதம் (September 10 – 12, 2021) நடைபெறவுள்ளது.
September 10ம் தேதி மாலை 7 மணிக்கு திரைப்பட விழா ஆரம்பித்து September 11, 12 ஆகிய திகதிகளில் முழுமையான திரையிடல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
விழாவில் பங்கேற்ற 250 க்கும் மேற்பட்ட படங்களில், 55 சிறந்த படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதன. இதில் 40 வரையான படங்கள் வரும் செப் 11, 12 ஆகிய தினங்கள் கனடாவில் ரொரன்ரொ நகரில் உள்ள Woodside Square சினிமாவில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
September 10ம் தேதி மாலை 7 மணிக்கு விழா உத்தியோகப்பூர்வமாக தொடங்கப்படுகிறது. அதில் ஊடக நண்பர்கள், சமூக அமைப்பினர் மற்றும் ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன.
இந்தியா மற்றும் இலங்கைக்கு அப்பால், தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது மிகவும் சிறப்பானதும் முக்கியமானதாகவும் கருதப்படுகின்றது.
கனடாவில் நடைபெறும் இவ் திரைப்பட விழா, உலக தமிழ் திரைப்படங்களுக்கும், கலைஞர்களுக்கும் மிகப்பெரும் அங்கீகாரமாக அமையும் என்பது உண்மை.
பல்லாயிரம் தமிழ் திரைப்படங்கள், குறும்படங்கள் என்பன வெளிவருகின்ற போதிலும், அத்திரைப்படங்கள் தமிழ் அல்லாத திரைப்பட விழாக்களிலேயே சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் நிலையே இதுவரை காலமும் தமிழ் திரை கலைஞர்களுக்கும், திரைப்படங்களுக்கும் உள்ள நிலை.
நிச்சயமாக ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இக்குறையை நிவர்த்தி செய்யும்.
தமிழ் திரைப்படங்களையும், அதன் பின்னால் உள்ள கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி, பாராட்டி, மகிழ்ந்து கொண்டாடவே ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா செப்டம்பர் 10 – 12, 2021 ரொரான்ரோவில் நடைபெறவுள்ளது.
உலகத் தமிழர்களுக்கான தனித்துவமான திரை அடையாளமாகவும், திரைக்களமாகவும், பல்வேறு வகையான தமிழ்த் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை ஆல்பங்கள் என வெவ்வேறு பிரிவுகளின் கீழ் போட்டியிட்டு தகுதியுடையவர்கள் “விருதினையும், அங்கீகாரங்களையும்” பெற்றுக்கொள்வார்கள்.
உலகம் முழுவதும் வாழ்கின்ற திரை மற்றும் கலைஞர்களுக்கான மிகப் பெரிய திரையிடல், பயிற்சி, பட தயாரிப்பு உதவிக்களமாக ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா அமையும். என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது
நன்றி
ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா 2021
www,ttff,ca
416-832-7306