இங்கிலாந்தில் வைத்தியத் துறையில் உயர் கல்விக்காக சில காலம் சென்றிருந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் மீண்டும் தனது பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டார் என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் இங்கிலாந்திற்கு சென்றிருந்த காலப் பகுதியில் மருத்துவர் எஸ். ஶ்ரீபவானந்தராஜாவிடம் அந்த பதவி ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் விடுமுறையில் நாடு திரும்பிய அவரை இலங்கையின் சுகாதார அமைச்சு மேற்படி பதவியை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.
இந்த வேண்டுகோள் காரணமாக அவர் தனது இங்கிலாந்து பயணத்தை ஒத்திவைத்து விட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை தனது பதவியை திரும்பவும் பொறுப்பேற்றுக் கொண்டார் என அறியப்படுகின்றது