கடந்த வருடம் நடைபெற்ற Ekuruvi Steps போன்று இந்த வருகடந்த ஜூன் 01 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 08 வரை நூறு நாட்க்கள், நாள் ஒன்றுக்கு 10,000 காலடிகள் என்று இலக்கு கண்காணிக்கப்பட்டு ஊக்கமளிக்கப்பட்டு தொடர்ந்து நடந்து உங்கள் உடல் உள அரோக்கியதை மேம்பெடுத்துவது மட்டுமல்லாது சமூகத்தையும் புத்துணர்ச்சியுடன் அழைத்துச்சென்ற ekuruvi Steps 2021 இன் நூறாவது நாள் வெற்றிவிழா வரும் புதன் கிழமை 08 ம் திகதி நடைபெறவுள்ளது .
Covid-19 வைரஸ் பரம்பல் காலத்தில் எமது உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியமாகின்றது. பல ஆய்வுகள் நாளுக்கு 10,000 காலடிகள் நடைப்பயிற்சியின் பயன்களை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன.
BMI யைக் குறைத்து உடல் எடையைப் பேணுவது, நீரிழிவு, இருதய நோய் என்பவற்றை வராது தடுப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என்று பல பயன்களைக் கொண்ட இந்த நடைப்பயிற்சியைத் தொடர்ந்து 100 நாட்கள் என்று இலக்கு நிர்ணயித்து நிறைவேற்றுவதன் மூலம், நாளடைவில் அதுவே பழக்கமாகி உடல் ஆரோக்கியம் மேம்பட உதவும். covid -19 பரம்பல் காலத்தில் உலகம் முழுவதும் இவ் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு நிகழ்வை நடத்தியதில் ekuruvi பெருமையடைகின்றது .
இந்நிகழ்வில் இணைந்து கொண்ட ஒவ்வொருவரும் எங்கள் Whatsapp “Ekuruvi Steps 2021″ இன் குழுமத்தில் இணைத்து ஒவ்வொரு நாளும்தாங்கள் நடந்த கால் நடைகளின் எண்ணிக்கையை பதிவிட்டுவந்துள்ளார்கள் . அதுவே எங்களால் தொடர்ச்சியாக 100 நாட்க்கள் கண்காணிக்கப்பட்டு வரும் 8ம் திகதி தனது நூறாவது நாளை Milliken இன் பாக்கில் நிறைவுசெய்யவுள்ளது.
இத் தொடர் 100 நாட்க்களிலும் பங்கு பற்றியவர்களுக்கு விருதும் , சான்றிதழ்களும் வழங்கி கோவுரவிக்கப்படும் . இதில் பங்குபற்றிய 220 பயனாளிகளையும் மற்றும் ஆதரவாளர்களையும் ஊடகவியலாளர்களையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, தாயகத்தில் வட, கிழக்கு மற்றும் மலையகம் எங்கும் கோவிட 19 காலத்தில் பொருளாதார கடும் நெருக்கடியை எதிர்வுகொள்ளும் ஆதரவற்ற மக்களுக்கு உதவுமுகமாக திரு ஆறுதிருமுருகன் ஐயாவின் வழிநடத்தலில் ” சிவபூமி அறக்கட்டளை ” யை ஒரு குறியீட்டு அமைப்பாக நாம் இந்த வருடம் ekuruvi Steps 2021 நேரடியாக உங்கள் பங்களிப்பை செய்யுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
உங்கள் உதவிகளுக்கு
Sivapoomi Trust , Kondavil , Jaffna
Commercial Bank Jaffna | Acc . No : 1060016510
SWIFT CORD – CCEYLKLX
நவஜீவன் அனந்தராஜ்
Ekuruvi Steps 2021
Ekuruvi Steps 2021 – 100 Days Celebration
10,000 Steps Per Day For 100 Days
08 Sep 2021
5:30 PM TO 8:00 PM
Milliken District Park
5555 Steeles Ave E, Toronto
– Medal Ceremony
– Certification Ceremony
– Dinner
– Covid 19 Protocol