கனடாவிலிருந்து வாரா வாரம் பிரசுரமாகும் பயனுள்ள ஒரு விசேட இதழ் கிடைக்கப் பெற்றோம்- ஆகஸ்ட் 30 அன்று வெளியான மேற்படி கனடா ‘ஈழமுரசு’ பத்திரிகையின் விசேட இதழ்
Erasure of Evidences -சான்றுகளை அழித்தல் என்னும் தலைப்போடு வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 30 ம் திகதியன்று ‘பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச நாள்’ என்ற காரணத்தால் (August 30- International Day of The Victims of Enforced Disappearances) அன்றைய தினம் இந்த விசேட இதழ் வெளியாகியுள்ளது. சில விளம்பரதாரர்களின் ஆதரவோடு 10000 பிரதிகள் கனடாவில் அச்சடிக்கப்பெற்று இலவசமாக விநியோகிக்கப்பெறும் இந்த விசேட இதழ். காலத்திற்கேற்ற ஒரு ‘கனதியான’ வெளியீடு என்பதை மறுக்க முடியாது.
24 பக்கங்களைக் கொண்ட இந்த விசேட இதழின் அனைத்துப் பக்கங்களிலும் ஆங்கிலத்தில் பல விடயங்கள் ஆக்கங்களாக பிரசுரமாகியுள்ளன. எமது மக்கள் மட்டுமன்றி. கனடாவில் வாழும் ஏனைய இனத்தவர்களும். எமது தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்த இளைய தலைமுறையினரும் வாசித்து அறிந்து கொள்ளும் வண்ணம் இவ்வாறு ஆங்கில மொழி மூலமான கட்டுரைகளும், எமது மண்ணில் காணமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றிய துள்ளியமான விடயங்களும் இந்த விசேட இதழின் அனைத்துப் பக்கங்களையும் அலங்கரிக்கின்றன.
முக்கியமாக முன்பக்கத்தில் என்னும் தலைப்போடு நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பாக வெளியிடப்பெற்ற Disappeared with Intent to Destroy Enforced Disappearances -Strategic Part of Eelam Tamil Genocide என்னும் கட்டுரை பிரசுரமாகியுள்ளது. 2ம் பக்கத்தில் Where are they? என்னும் தலைப்பில் முன்னுரை எழுதப்பெற்றுள்ளது. தொடர்ந்து அதிகமான பக்கங்களில் எமது தாயகத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றிய மனதை வாட்டும் விடயங்களும் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் அந்த உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத் தலைவர் அல்லது தலைவி ஆகியோரது புகைப்படங்களும் பிரசுரமாகியுள்ளன.
இந்த விசேட இதழின் பிரதிகளைப் பெற விரும்புவோர் கனடா ”ஈழமுரசு’ பத்திரிகை அலுவகத்தோடு தொடர்பு கொள்ளவும்.
-கனடா உதயன் ஆசிரிய பீடம்