(மன்னார் நிருபர் )
(4-09-2021)
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் 1984. ஆண்டில் சாதாரண தரம் மற்றும் 1987 உயர் தரம் ஆகியவற்றில் கல்வி கற்ற பழைய மாணவர்களால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள கொரோனா விடுதிக்கு அத்தியாவசியமாக பொருட்கள் இன்றைய தினம் சனிக்கிழமை(4) காலை கையளிக்கப்பட்டுள்ளது
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள கொரோனா விடுதிக்கு அத்தியாவசிய தேவையான நீர் சுத்திகரிப்பான் ஒன்றும், கிருமி நாசினி தெளிக்கும் கருவிகள் மூன்று ஆகிய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கையிலும் வெளி நாடுகளிலும் வசித்து வருகின்ற குறித்த மாணவர்கள் தங்கள் நண்பர்களோடு ஒன்றிணைந்து இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதற்கமைவாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள கொரோனா விடுதிக்கு அத்தியாவசியமாக தேவைப்பட்ட நீர் சுத்திகரிப்பான் ஒன்று மற்றும் கிருமி நாசினி தெளிப்பான் மூன்றும் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.