(6-09-2021)
ஜிப்ஸீச் இசைக் குழுவின் தலைவராக இருந்த பிரபல பாடகர் சுனில் பெரேரா காலமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனது 68 வயதில் காலமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார்.
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அண்மையில் பூரண குணமடைந்து வீடு திரும்பியிருந்தார்.
இருப்பினும் மீண்டும் அவருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.