(7-9-2021)
கல்முனை பாண்டிருப்பு பிரதேசத்தில் இன்று(7) இரவு 07.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட ஓட்டமாவடி பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்றை நோக்கி ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1720 கிலோ கிராம் நீர் பூசணிக்காயை ஏற்றிக்கொண்டு வந்த லொறியே இந்த விபத்தில் சிக்கியது. பின்பக்க டயர் வெடித்தமையே விபத்துக்கான காரணம் என அறியப்பட்டுள்ளது.
ஸ்தலத்திற்கு விரைந்த கல்முனை போக்குவரத்து பொலிஸார் வாகனப் போக்குவரத்தை நிறுத்தி பிரதேச மக்கள் மற்றும் வீதிப்பயணிகளின் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த லொறியே நிமிர்த்தினர். சுமார் 20 நிமிடம் அளவில் வேகமாக செயற்பட்ட பிரதேசவாசிகள் குறித்த லொரியையும், வீதியில் விழுந்து கிடந்த நீர் பூசணியையும் மீட்டனர்.
இருந்த போதிலும் சுமார் 200 கிலோ அளவில் சேதமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.