(மன்னார் நிருபர்)
(08-09-2021)
மன்னார் மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கிழமை இரவு மற்றும் இன்று புதன் அதிகாலையும் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.
இவர்களுடன் சேர்த்து மன்னார் மாவட்டத்தில் 22 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
-அவர் இன்று(8) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,,
-நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 72 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவர் தடுப்பூசி எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.இன்று புதன் கிழமை அதிகாலை உயிரிழந்தவர் 78 வயதுடைய பெண்.இவர் அண்மையில் தடுப்பூசி ஒன்றை பெற்றுக் கொண்டுள்ளார்.
-மன்னார் மாவட்டத்தில் இது வரை 22 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது.
மேலும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (7) மன்னார் மாவட்டத்தில் புதிதாக 31 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-இந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் 1806 கொரோனா தொற்றாளர்களும்,மன்னார் மாவட்டத்தில் இது வரை 1823 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-மேலும் இன்றைய தினம் புதன் கிழமை முதல் மன்னார் மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
-இன்றைய தினம் முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,முருங்கன் டோன் பொஸ்கோ தொழில் பயிற்சி நிலையம்,மற்றும் இரணை இலுப்பைக்குளம் ம.வி பாடசாலை ஆகியவற்றில் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.
-நாளை (9) மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி,நானாட்டான் டிலாசார் பாடசாலை,மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,மறிச்சிக்கட்டி அல் ஜெசிரா பாடசாலை மற்றும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.