மன்னார் நிருபர்
(08-09-2021)
மன்னார் நகர சபையால் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் பொதுமயான அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மன்னார் நகர சபை தலைவர் ஞா. அன்ரனி டேவிட்சன் தலைமையில் மன்னார் பொதுமயான பகுதியில் இன்று (8) காலை 9.30 மணியளவில் இடம் பெற்றது.
இதில் அஞ்சலி மண்டபம், கிரியைகள் மண்டபம், நடைபாதைகளுக்கான கற்கள் பதித்தல் பிரார்த்தனை மண்டப திருத்த வேலைகள் மற்றும் மலசலகூடங்கள் அமைப்பதற்கான அடிக்கற்கல் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பொன்னம்பலம் சிறிவர்ணன் ,மன்னார் நகர சபை செயலாளர் ,கணக்காளர் மன்னார் நகர சபை உதவித் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு வேலைத்திட்டங்களுக்கான அடிக்கற்களை நாட்டி வைத்தனர்.