மன்னார் மாவட்டத்தில் ற்போது கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளதால் அங்கு மின்சாரத்தில் இயங்கும் உடல் தகன நிலையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ள மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் முயற்சிக்கு ஆதரவு வழங்க – மின் தகன நிலைய நிதிக்காக கனடா TORONTO VOICE OF HUMANITYஅமைப்பின் ஊடாக 1 இலட்சம் ரூபாய்களை அனுப்பி வைத்துள்ளார் கனடா ஆதிபராசக்தி குரு மன்றத்தின் ஸ்தாபகர் சக்தி ஞானம்மா திருநாவுக்கரசு அவர்கள்.
இது பற்றிய செய்தியை கனடாவில் பத்திரிகையில் வாசித்த பின்னர் சக்தி ஞானம்மா திருநாவுக்கரசு அவர்கள். கனடா ORONTO VOICE OF HUMANITYஅமைப்பினரோடு தொடர்பு கொண்டு இந்த நிதியை மன்னார் அரச அதிபரின் அவசரமான முயற்சிக்கு வழங்கினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ஸ்காபுறோ வைத்தியசாலை நிதிக்கு 5000 டாலர்களை கனடா ஆதிபராசக்தி குரு மன்றத்தின் சார்பில், ஸ்தாபகர் சக்தி ஞானம்மா திருநாவுக்கரசு அவர்கள் வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது
செய்தியும்; படங்களும்;-சத்தியன்