காஞ்சிபுரம் ஜவகர்லால் நேரு தெருவை சேர்ந்த பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக பேசி பழகிய, தொழிலதிபர் குணசீலன் என்பவர் நாளடைவில் காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதனிடையே, மேல்கதீர்பூரில் உள்ள தனது பூர்வீக சொத்துக்களை காண்பிப்பதாக கூறி, அந்த பெண்ணை தனது காரில் அழைத்து சென்றபோது, குணசீலன் குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்துள்ளார்.
பின்பு தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து, அந்த பெண்ணை பம்பு செட்டில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெண்ணில் அலறல் சத்தத்தை கேட்டு பொதுமக்கள் கூடவே, 5 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தகவலறிந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனயில் அனுமதித்துள்ளனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், வழக்கறிஞர்கள் ஜெபநேசன் , குணசேகரன், அஜித், மற்றும் தொழிலதிபர் குணசீலன் ஆகிய 4 பேரை கைது செய்து 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, தலைமறைவாக உள்ள காமராஜர் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.