(10-10-2021)
நாடு திறக்கப்பட்டாலும் தீவிர கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்கிறார் இலங்கையின் காதார பணிப்பாளர் அசேல குணவர்தன கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானங்கள் அறிவிக்கப்படும்.
அதற்கமைய இன்றைய தீர்மானத்தில் நாடு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகளின் கீழ் திறக்கப்படும்.
தொடர்ந்து கட்டுப்பாட்டு சட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும். அத்துடன் ஹம்பாந்தோட்டைக்கு பைசர் தடுப்பூசி வழங்குவதற்கு அரசாங்கமே தீர்மானம் எடுத்துள்ளதென சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.