இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக் குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (10) அதிகாலை புறப்பட்டனர்.
இவ் விஜயத்தின் போது பிரதமர் ஜி 20 சர்வ மத மற்றும் கலாச்சார மாநாடு – 2021 இன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றவுள்ளவுடன், இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் .காமினி செனரத் உள்ளிட்ட தூதுக் குழுவினர் பிரதமருடன் இவ் விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.