பைசர் தடுப்பூசி வேண்டுமென கேட்டனர் நாங்கள் இல்லை என தெரிவித்ததும் தடுப்பூசி செலுத்தாமல் திரும்பிச்சென்றுவிட்டனர்
கொழும்பில் இளைஞர்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான ஆர்வம் குறைவாக காணப்படுகின்றது என கொழும்பு மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி மருத்துவர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை முதல் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டோம் ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட குறைவானவர்களே தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
நாளொன்றிற்கு 7500 பேருக்கு தடுப்பூசி செலுத்துவோம் என எதிபார்த்தோம் ஆனால் 3500 பேருக்கு தடுப்பூசி செலுத்தினோம் என அவர் தெரிவித்துள்ளார்.
பலர் பைசர் தடுப்பூசி வேண்டுமென கேட்டனர் நாங்கள் இல்லை என தெரிவித்ததும் தடுப்பூசி செலுத்தாமல் திரும்பிச்சென்றுவிட்டனர்,கொவிட் 19 பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கிடைக்கின்ற தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுங்கள் என்பதே இளைஞர்களிற்கான எனது எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்துள்ளார்.