கடந்த சில வாரங்களாக இலங்கையில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்ற நிலையில், தினசரி மரணங்கள் 100 மேல் சம்பவிப்பதாக அறியப்படுகின்றது.
எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதியின் பின்னர் நேற்று முன்தினம் 131 என்ற குறைவான மரண எண்ணிக்கை பதிவாகியது. எவ்வாறிருப்பினும் நிலைமை முற்றாக சீராக மேலும் கால அவகாசம் தேவைப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000 ஐ கடந்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை பதிவான 157 மரணங்களுடன் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 11,152 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 70 ஆண்களும் 87 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இவர்களில் 130 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர். எதிர்வரும் தினங்களிலும் இதே மட்டத்திலான கொரோனா மரணங்கள் பதிவாகக் கூடும் என்று மருத்துவ தரப்பு தெரிவித்துள்ளது.