(12-09-2021)
இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் தொடர்பில் நேற்று (11) சனிக்கிழமை வரை 9 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,
மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அவரது பொலிஸ் குழுவினரும் கடற்படையினரும் இணைந்து கடந்த சில தினங்களுக்குள் இலங்கையின் தென் திசையிலுள்ள ஆழ்கடல் பகுதியில் போதைப்பொருள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டனர்.
இந்தச் சுற்றிவளைப்புக்களினபோது இலங்கைக்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்ட பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பிலேயே இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.