(12-09-2021)
விலை அதிகரிக்கப்பட்டுள்ளபோதும் சந்தையில் லாப் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு தொடர்ந்து காணப்படுகிறது. அதனால் நுகர்வோர் பாரிய அசெளகரியங்களுக்குள்ளாகி வருவதை காணக்கூடியதாகவுள்ளது.
குறித்த சமையல் எரிவாயு சிலிண்டர் குறைந்தளவிலேயே சந்தைக்கு விநியோகிக்கப்படுவதால் நுகர்வோருக்கு தேவையான நேரத்தில் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக லாப் சமையல் எரிவாயு நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் லாப் காஸ் நிறுவனம் தெரிவிக்ககையில், டொலர் பற்றாக்குறை காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்ய முடியாமலுள்ளது. கைவசம் உள்ள சிலிண்டர்களை தேவைக்கேற்ற வகையில் விநியோகித்து வருவதால் சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம் என லாப் காஸ் நிறுவனம் கூறியுள்ளது.