(15-09-2021)
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதுடன் அவர் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தன்னால் ஏற்பட்ட அசம்பாவிதமான சம்பவங்களுக்கு பொறுப்பேற்று அவர் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.