நோர்வே நாட்டில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றது; தேர்தலில், இலங்கை தமிழரான ஹம்ஸி குணரட்ணம் தெரிவு செய்யப்பட்டுளார். நோர்வேயின் மிகப்பெரிய அரசியற் கட்சியான தொழிற்கட்சி, நாட்’டின் தலைநகரான ஒஸ்லோவில் நிறுத்திய வேட்பாளர்களில், பிரதமர் பதவிக்கான வேட்பாளர் யூனாஸ் கார் ஸ்டூரவுக்கு அடுத்த இடத்தில் ஹம்சியை நிறுத்தியதன் மூலம் அவரது நாடாளுமன்றப் பதவியை உறுதி செய்திருந்தது. அத்துடன் இவரது நோர்வே நாட்டில் வாழும் அ னைத்து தமிழ் மக்களுக்கும் ஒரு அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளது என நோர்வேயில் வாழும் பல அன்பர்கள் தங்கள் சமூக ஊடகங்களின் பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
நோர்வேயில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், இலங்கை தமிழரான ஹம்ஸி குணரட்ணம் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக இலங்கையில் இருந்து மூன்று வயதில் தனது பெற்றோருடன் நோர்வேக்கு அகதியாக சென்ற ஹம்சாயினி) ஆரம்பத்தில் நோர்வே நாட்டின் மிகப்பெரிய கட்சியான தொழிற்கட்சியின் ஒஸ்லோ இளைஞரணியில் இணைந்தார் பின்னர் அவர் அதன் தலைவியாகவும் பதவி வகித்தவர். 19 வயதில் (2007) ஒஸ்லோ மாநகரசபையின் பிரதிநிதியாகப் பெரும் ஆதரவுடன் தெரிவான அவர், 2015முதல் ஒஸ்லோ மாநகரசபையின் துணை முதல்வராகப் பதவி வகிக்கிறார். இந்நிலையில் அவருக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர். இதேவேளை முழுநேர அரசியல்வாதியாக நோர்வே தமிழர்கள் மத்தியில் இருந்து ஹம்ஸி மாத்திரமே உருவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹம்ஸி குணரட்னம் 2007 இல் முதல் முறைப்படி நடைபெற்ற தேர்தலில் ஒஸ்லோ நகர சபையின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் அவர் ஸ்டோர்டிங்கின் துணை உறுப்பினராக இருந்தார் (2013-2017) மற்றும் ஒஸ்லோவின் துணை மேயராக 21 அக்டோபர் 2015 அன்று பதவியேற்றார். தற்போது பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். இலங்கையில்,மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் இலங்கைக்குச் சென்ற போது அவரைச் சந்தித்து நினைவுப் பரிசு ஓன்றை வழங்கியபோது எடுக்கப்பட்ட படம் இங்கு காணப்படுகின்றது