ஹமில்டன் நகருக்கு அருகில் உள் மவுண்ட் ஹோப் என்னும் பட்டணம் சார்ந்த பகுதியில் நடைபெற்ற இரட்டை துப்பாக்கிச் சூடு, வீட்டு மற்றும் மற்றும் மனிதக் கடத்தல் ஆகிய பாரதூரமான சம்பவங்களினால் ஓர் இளைஞர் கொல்லப்பட்டார் என்றும் அவரது சகோதரன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் என்றும் மேலும் மேற்படி கொல்லப்பட்டவரதும் காயப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவரதும் தந்தையான பகிர் அலி என்பவர் கடத்தப்பட்டார் என்றும் காலை கிடைத்த செய்திகள் தெரிவித்தன. பின்னர் சில மணி நேரங்களில் கிடைத்த செய்தியில் கடத்திச் செல்லப்பட்ட தந்தை பலத்த காயங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.
நேற்று வியாழக்கிழமை, ஹாமில்டன் பிராந்திய போலீசார் அதிகாலை 3 மணியளவில் கிளன்காஸ்டர் மற்றும் டிக்கென்சன் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாக அங்கு விரைந்து சென்றனர். புத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் வாகனங்கள் அந்த வீட்டைச் சூழ்ந்து கொண்டன.
போலிஸ் அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றபோது, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் இரண்டு இளைஞர்களைக் கண்டனர். அவர்கள் இருவரும் 20 வயதிற்குட்பட்ட சகோதரர்கள் எனவும் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலத்த காயங்களுடன் காணப்பட்டதால். ஊடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஏனினும் காயமடைந்த ஒருவர் பின்னர் உயிரிழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
பொலிசாரின் கூற்றுப்படி, அந்த இரு இளைஞர்களின் தந்தை கருப்பு நிற எஸ்யூவி என்னும் வாகனத்தில் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டார் என்றும் அயலவர்கள் தெரிவித்தார்கள்
கடத்தப்பட்டவர் 63 வயதான ஃபகீர் அலி எனவும் பாகிஸ்த்தான் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் ஓர வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் என்றும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பிந்திக்கிடைத்த தகவல்களின் படி அலி தனது வீட்டில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டபோது கருப்பு மற்றும் வெள்ளை நிற பிஜாமா ஆடை அணிந்திருந்தார் என்றும் தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிசார் அறிவித்துள்ளனர் கூறப்படுகிறது.