2019ம் ஆண்டுக்கு முன்னர் ஜஸ்டின் ட்ரூடோவின் தலைமையிலான அரசாங்கத்தில் நீதி அமைச்சராக பதவி வகித்த பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த திருமதி ஜோடி வில்சன்-ராய்புல்ட் எழுதிய ஆங்கில நூல் தற்போது வெளிவந்துள்ள நிலையில் அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் சிலவேளை தற்போது 20ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் போட்டியாளர்களான கொன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர்எரின் ஓ டூல் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் மற்றும் பசுமைக் கட்சியின் தலைவி அனாமி போல் ஆகியோருக்கு ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிரான பிரச்சாரப் பாதையில் புதிய தாக்குதல்களைக் மேற்கொள்ளும் வகையில் அமையும் என்று கருதினாலும் சில அரசியல் விமர்சகர்கள் “ அவ்வாறு நடக்காது என்றும் அந்த நோக்கத்தோடு தனது புத்தகத்தை ஜோடி வில்சன்-ராய்புல்ட் எழுதவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
“கேபினட்டில் இந்தியன்” (Indian In the Cabinet) என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்தில் வில்சன்-ராய்போல்ட் எஸ்என்சி-லாவால் என்னும் மொன்றியால் நகர் சார்ந்த நிறுவனம் சம்பந்தமான விவகாரத்தின் மத்தியில் ட்ரூடோ அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பிறகு, 2021 தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி வாரத்தில் வெளிவந்திருப்புத அதன் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றுத என்றும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
304 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகம் அவரது நெருக்கடியான நாட்களை கூறுவதாகவும் அறியப்படுகின்றுது. ஒட்டாவாவில் அவர் அமைச்சர் பதவி வகித்த போது கட்சி சார்ந்த அரசியலை ஜோடி வில்சன்-ராய்புல்ட் எப்படிப் பார்த்தார் என்பதையும் ட்ரூடோ எப்படியான மனிதர் அல்லது பிரதம மந்திரி என்பதைப் பற்றி மேலும் அறிய ஆர்வமுள்ள எவருக்கும் படிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாவும் அறியப்படுகின்றது.
இதேவேளை,அடுத்த வாரம் 20ம் திகதி நடைபெறவுள்ள வாக்கெடுப்பின் தாக்கம் நிறைந்த காலப்பகுதியில் ,வில்சன்-ராய்போல்ட் ஒரு பழங்குடிகள் சார்ந்த நல்லிணக்கம், குற்றவியல் நீதி சீர்திருத்தம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் “உண்மையான மாற்றம்” எவ்வளவு சாத்தியம் என்பதைப் பற்றி ஒரு தெளிவான பார்வையை தெரிவித்திருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர் ஓருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் ஓரு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் 20ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்குத. ஆனால் இந்த புத்தகத்தின் வருகையானது. அவருடைய குரலை மீண்டும் ஒருமுறை, மிக உயர்ந்த அரசியல் மட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும்மக்களால் வாசிக்கப்படும் என்றும் இந்த புத்தகம் அக்டோபர் நடுப்பகுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கனேடியர்கள் 20ம் திகதி வாக்களிப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் அதன் வெளியீடு திகதி மாற்றப்பட்டது என்பதும் லிபரல் கட்சிக்கு தாக்கத்தை அதிகரிக்க தனக்கு எண்ணம் இல்லை என்றும் ஜோடி வில்சன்-ராய்புல்ட் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
இதேவேளை. தற்போதைய தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது கன்சர்வேடிவ் தலைவர் எரின் ஓ டூல் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் ஆகியோர் வில்சன்-ராய்பவுல்டின் அனுபவத்தை ஜஸ்டின் ட்ரூடோ பற்றிய எச்சரிக்கைகளை கனடிய வாக்காளர்களுக்கு உத்வேகமாகவும் எடுத்துக் கூறி வருகின்றனர் என்றும் பலர் தெரிவித்துள்ளனர்.
ஓ’டூல் ட்ரூடோ தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ” நான் ஜஸ்டின் ரூடோ பற்றி சொல்லுவதை நீங்கள் நம்பாவிட்டால் ஜோடி வில்சன்-ராய்போல்ட் தனது புத்தகத்தில் என்ன சொல்லியிருக்கின்றார் என்பதை படித்துப்பாருங்கள” என்றும் வாக்காளர்களைப் பார்த்துக் கூறியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
லிபரல் கட்சித் தலைவரான ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிரான ஜோடி வில்சன்-ராய்போல்ட் அவர்களின் முதன்மையான குற்றச்சாட்டுகளில் ஒன்று புத்தகத்தின் தொடக்க அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. பிரதமருடனான நேருக்கு நேர் சந்திப்புகளுக்குப் பிறகு ட்ரூடோ மற்றும் அவரது அலுவலகத்தில் பணியாற்றியவர்கள் சிலர் தன்னோடு தொடர்பு கொண்டு கியூபெக் இன்ஜினியரிங்கிற்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் ஓர் செய்தி வெளியானது.
வில்சன்-ராய்போல்ட் நிறுவனம் பின்னர் ஒரு மோசடிக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டது என்றும் மற்றும் 280 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக புத்தகத்தை வாசித்தவர்கள் தங்கள் பதிவுகளில் தெரிவித்துள்ளனர்..