மன்னார் நிருபர்
17-09-2021
மன்னார் மாவட்டத்தில் பைஸர் தடுப்பூசியில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை(17) காலை முதல் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மற்றும் பேசாலை சென்மேரிஸ் பாடசாலை ஆகிய இடங்களில் இடம் பெற்றது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவை இணைந்து 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசியின் முலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்ட வர்களுக்கு 2வது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
மேலும் கடந்த மாதம் முதலாவது பைஸர் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட கர்ப்பிணி தாய்மாருக்கும் இன்றைய தினம் இரண்டாவது பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.