கனடா தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு ஆதரவாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்துக்ளைப் பதிவிட்டுள்ளார்
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, நடைபெறவுள்ள கனடா தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு ஆதரவாக தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.
கனடா தேர்தலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பராக் ஒபாமா ஒப்புதல் அளித்துள்ள ஆதரவான பதவானது, இதுவரையில். ஒரு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியால் கனேடிய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு வழங்கப்பெற்ற ஒரு அரிய ஒப்புதல் பதிவு என்பது இங்கு குறிப்பிடத்தக்க்தாகும். ஆனால் இரண்டாவது முறையாக ஒபாமா அதை செய்தார் என்பதும் இங்கு கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
2019 இல் கனடாவின் கடைசி தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ என்னும் லிபரல் தலைவரை மீண்டும் தேர்ந்தெடுக்குமாறு ஒபாமா கனடியர்களை வலியுறுத்தினார். ஒபாமா தனது பதிவில் ட்ரூடோவுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமைப்படுவதாகவும், வலுவான ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட திறமையான தலைவர் அவர் என்றும் விபரித்தார்.
எதிர் வரும் 20ம் திகதி நடைபெற உள்ளநாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது கன்சர்வேடிவ் போட்டியாளருடன் கடுமையான தேர்தலில் ஈடுபட்டுள்ளார். ஓபாமா அளித்த ஒப்புதல் ட்ரூடோவுக்கு 2019 ல் முற்போக்கு வாதிகளைச் சிந்திக்கத் தூண்டியது என்புத இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.