(18-09-2021)
வவுனியாவில் இருவர் கொரோனா தொற்றினால் இன்று மரணமடைந்தனர்.
குறித்த நபர்களில் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் சாவடைந்தார்.
மற்றயவர் சுகவீனம் காரணமாக வீட்டில் மரணமடைந்திருந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.