ஐக்கிய நாடுசபையின் 76வதுகூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக நேற்று முன்தினம் இலங்கையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச நேற்று மாலை நியூயோர்க் விமானநிலையத்தை அடைந்தார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
நியூயோர்க் விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதி மோகன் பீரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜியத்தின் நியூயோர்க் நகரில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , நேற்று (18) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்பதற்காக நாட்டை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதோடு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் அரச தலைவராக உரையாற்றவுள்ள முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவர்கள் தலைமையில், இம்மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இம்முறை கூட்டத்தொடர், “கொவிட் 19 வைரஸ் தொற்றுப்பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி” என்ற தொனிப்பொருளிலேயே இடம்பெறவுள்ளது.
ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடரில், இம்மாதம் 22 ஆம் திகதியன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார் என்பதுடன், இதற்கிடையே, கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களுடன், இரு தரப்புக் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளார்.
இவ்வாறிருக்க, எதிர்வரும் எதிர்வரும் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை நியுயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றவுள்ள கோட்டாபாயவின் வருகையை முன்னிட்டு சில தமிழர் அமைப்புக்கள் அங்கு அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்யலாம் என்ற என்று எதிர்பார்க்கப்படுகின்றது என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.