(21-09-2021)
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரிஷாத் பதியுதீனின் விளக்கமறியல் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கோட்டை நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போதே இந்த விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.