(21-09-2021)
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் இணைப்பாளர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த ஸலாஹுத்தீன் காஜி (சாபு) என்பவரே மரணமடைந்த வராவார்.
இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இவர், பட்டக்காடு மஸ்ஜிதுல் இலாஹிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவரும், பட்டானிச்சூர் மன்பஉல் உலூம் அரபுக் கல்லூரியின் உப தலைவரும், வவுனியா பள்ளிவாசல் குழுவின் பொருளாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் இணைப்பாளரும் ஆவார்.
குறித்த நபரின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஓட்டமாவடிக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.