(21-09-2021)
முல்லைத்தீவு – மல்லாவி பிரதேசத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட கொல்லவிளாங்குளம் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கணவனை பிரிந்த நிலையில் இரு பிள்ளைகளுடன் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 32 வயதான பிரதீபன் புஸ்பராணி எனும் இளம் குடும்ப பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவரது சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் முடிவுகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட வுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.