24-09-2021
சுமார் 4 மில்லியன் ரூபா பெறுமதியான தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தியா- சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த நபர்களிடம் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை சுங்கத் திணைக்களத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
அதில் 472 கிலோ மஞ்சள், 352 கிலோ ஏலக்காய் மற்றும் அதிகளவு மருந்துகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொருட்களின் பெறுமதி சுமார் 4 மில்லியன் ரூபா என சுங்கத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
இந்தப்பொருட்களுக்கு இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளமையால், சுற்றுலாப் பயணிகளாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்கள் தங்கள் பயணப் பொதியில் மறைத்து பொருட்களை இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முயற்சித் தமை தெரியவந்துள்ளது.