ரொறன்ரோ மாநகர பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெப்ரி நோர்த்ரப் கடமையின் போது கொல்லப்பட்ட வழக்கில் மோசமான குற்றவாளிக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு கண்டனம்
கனடிய நீதித் துறையில் உள்ள குறைபாடுகளால் கொடிய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை என ரொறன்ரோவின் அரசியல் தலைவர்களாக விளங்கும் ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் மற்றும் ரொறன்ரோ நகர பிதா ஜோன் ரோரி ஆகியோர் உட்பட பல விசனம் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கடமையில் இருந்த போது கொல்லப்பட்ட ரொறன்ரோ மாநகர பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெப்ரி நோர்த்ரப் கொலை வழக்கில் மோசமான குற்றவாளிக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்த போதே இவ்வாறு அவர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
மேற்படி கொலைச் சம்பவத்தில் கடமையிலிருந்த ரொறன்ரோ காவல்துறையைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெப்ரி நோர்த்ரப் கொலை வழக்கில் மோசமான குற்றவாளிக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு ஏன் நீதிமன்றம் பிணை வழங்கியது என்ற விடயம் தங்களுக்கு புரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள் சம்பவ தினத்தன்று கொல்லப்ப்ட்ட மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெப்ரி நோர்த்ரப் நகர மண்டபத்திற்கு கீழே உள்ள நிலத்தடி வாகன நிறுத்துமிடத்தில் கடமையின் நிமித்தம் சென்றபோது அங்கு வாகனத்தில் வேகமாக வந்த உமர் ஜமீர், என்னும் 31 வயதான கொலையாளி நீதிமன்றத்தால் முதல் நிலை கொலை குற்றச்சாட்டில் விசாரணைக்கு காத்திருக்கும்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டமை அவர் தப்பித்துச் செல்ல வாய்ப்பை ஏற்படுத்துவது போன்று தெரிகிறது என்றும் அரச தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேற்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் கொலையயாளியான அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
இவ்வாறான நிலையில் ஒரு போலீஸ் அதிகாரியின் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை விடுவிப்பதற்கான நியாயமற்ற முடிவை நீதிபதி ஏன் எடுத்தார் என்பதை விவரிப்பதில் நீதி மன்றம் தவறிவிட்டுத் என்றும் நியாயவாதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை, வழக்கறிஞர் நாடர் ஹசன் தனது காரணங்களின் ஒரு பகுதியை தெரிவித்து குற்றஞ்சாட்டப்பட்டவரை தண்டிக்கும் படி நீதிமன்றத்தைக் கேட்கும் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையை எடுப்பதாகக் கூறினார், ஒரு தீவிர குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபருக்கு பிணை வழங்கப்படும்போது, பொதுமக்கள் தவிர்க்க முடியாமல் இதன் காரணத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர் என்று நார்த்ரூப் மற்றும் பிற அதிகாரிகள் டொராண்டோ சிட்டி ஹால் அருகே குத்தாட்டம் குறித்து விசாரணை நடத்த வந்தனர் என்றும் கடந்த ஜூலை 2 ம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு கொலையாளி ஜமீர் ஓட்டியதாகக் கூறப்படும் வாகனம் மோதியதில் அவர் கொல்லப்பட்டார் என்றும் கொன்ஸ்டபிள் நார்த்ரூப்பின் மரணத்திற்குப் பிறகு, இந்தக் கொலையானது திட்டமிட்டு வேண்டுமென்றே செய்த செயல் என்று பொலிசார் குறிப்பிட்டனர்.
55 வயதான கொன்ஸ்டபிள் ஜெப்ரி நார்த்ரூப் சாதாரண உடையில் இருந்தார் என்றாலும் ஆனால் இந்த கழுத்தில் அணிந்திருந்த பெயர் குறி மூலம் அடையாளம் காண முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சாதாரண உடையில் இருந்த மற்றுமொரு உத்தியோகத்தர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு சிகிச்சை பெற்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும் இதேவேளை. கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் காவலில் இருந்து விடுவிக்கப்படுவது மிக மிக அரிதான ஓரு தீர்ப்பு என்றும் குறிப்பிடப்படுகின்றது