நடந்து முடிந்த கனடிய பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் கொன்சர்வேட்டிவ் கட்சிக்குள் தோன்றிய அதிகளவு எதிர்ப்புக்களை சமாளிக்க வேண்டிய சவாலுக்குள் கட்சியின் தலைவர் எரின் ஓ டூல் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த திங்கட்கிழமை தேர்தல் தோல்விக்குப் பிறகு அவருக்கு எதிராக கத்தி போன்ற எதிர்ப்புக்கள் வருவதால் அவை எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்டுபிடிக்க எரின் ஓ டூலின் அவர்கள் சார்ந்த குழு முயன்று வருகிறது என்றும் தெரிவிக்கப்படுகின்றது அந்த எதிர்ப்புக்கள் எல்லா இடங்களிலிருந்தும் வருகிறன என்றும் கூறப்படுகின்றது
இதேவேளை, அடிமட்ட அமைப்பாளர்கள். மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும், பழமைவாதக் குழுவின் நீண்டகால உறுப்பினர்கள். மற்றும் ஓ டூல் பிரச்சாரத்தின் வெளிப்புறத்தில் உள்ள பழமைவாதிகள், ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது தடவையாக புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று போராடத் தொடங்கியுள்ளனர் என்று அறியப்படுகின்றது.
கடந்த திங்களன்று நடைபெற்ற தேர்தலை அடுத்து 15 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் முக்கிய உறுப்பினர்களோடு தொடர்பு கொண்டு பேசினார்கள் இது கன்சர்வேட்டிவ் கட்சியானது ஒரு உத்தியோகபூர்வமான பிரதான எதிர்க்கட்சியாக தங்கள் பங்கை மீண்டும் செய்ய ஒட்டாவாவுக்கு செல்ல வாய்ப்புக்கிட்டியுள்ளுத. கிட்டத்தட்ட ஒருமித்த கருத்து என்னவென்றால், ஓ டூல் கட்சித் தலைமையில் கட்சியை தொடர்ந்து கொண்டு செல்வதில்
அவருக்கு முன்னால் ஒரு கடினமான சவால்கள் இருக்கும் என்றும் தொடர்ச்சியாக கட்சிக்குள் உள் முரண்பாடுகள் தோன்றியும் மறைந்தும் நிகழப்போகின்றன என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது
கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முனையும் பலர் தங்களை இனம் காட்டாமல் செய்தியாளர்களுக்கு தற்போதைய தலைவர் எரின் ஓ டூல் மற்றும் அவரது குழு பற்றிய கருத்துக்களைக் கூறினார்கள். இந்த விடயத்தில் தற்போதைய தலைவர் எரின் ஓ டூல் மற்றும் அவரது குழு எதிர்கொள்ளும் கோபம் உண்மையானது, எரின் சிறப்பாக செயல்படவில்லை என்று கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆண்ட்ரூசியர், அவர்களும் அவர் குறைவான இடங்களையும், குறைந்த சதவீத மக்கள் வாக்குகளையும் வென்றார். என்று வேறு சிலரும் கூறினார்கள்.
இவ்வாறாக ஏமாற்றம் அளிக்கும் இந்த 2021 தேர்தலுக்குப் பின்னர். முன்னைய தலைவர் அன்ரூசியரைப் போலவே, எரின் ஓ டூலும் தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களையும் சிரேஸ்ட உறுப்பினர்களையும் வழிநடத்துவாரா என்ற கேள்வியே தற்போது முக்கிய ஒன்றாக கட்சிக்குள் தொடர்கின்றது என்பதே உண்மை.