யாழ்ப்பாணம் அச்சுவேலி தம்பாலை சந்நிதி வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி கார்த்திகேசு சித்திரவடிவேலு அவர்கள் கடந்த 03-09-2021 அன்று வெள்ளிக்கிழமையும் அன்னாரின் துணைவியார் திருமதி சித்திரவடிவேலு தவமலர் அவர்கள் கடந்த 07-09-2021 செவ்வாய்கிழமையன்றும் இறைவனடி சேர்ந்தார்கள் என்ற தகவலை கேள்வியுற்ற உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உலகெங்கும் வாழும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகம் சார்ந்த அனைவருக்கும் எங்கள் துயரத்தில் தொடக்கம் பங்கெடுத்து வருகின்றார்கள்.
கலாநிதி கார்த்திகேசு சித்திரவடிவேலு அவர் உயிர் துறந்த நான்காம் நாளே அன்னாரின் அன்புத் துணைவியாரும் உயிர் துறந்த பிரிவானது எமது உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ்ந்த வட்டாரத்தில் மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் தோற்றுவித்துத என்பதை அனைவருமே நன்கு உணர்ந்து அவர்கள் இருவருக்கும் தங்கள் அஞ்சலிகளை செலுத்தினார்கள்...
அமரராகிவிட்ட கலாநிதி கார்த்திகேசு சித்திரவடிவேலு அவர்களின் மறைவு தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக் கழக சமூகம் வெளியிட்ட அனுதாபக் குறிப்பு ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது விலங்கியல் துறையின் ஓய்வுபெற்ற இணைப் பேராசிரியர் விலங்கியல் மற்றும் தாவரவியல் துறையின் முன்னாள் தலைவர் எங்கள் அன்பான ஆசிரியர் பேராசிரியர் கே. சித்திரவடிவேலு அவர்கள், விலங்கியல் துறையின் ஓய்வுபெற்ற இணைப் பேராசிரியரும், மீன்வள மேம்பாட்டு மையத்தின் முன்னாள் இயக்குனரும் ஆவார், யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகமானது 03.09.2021 அன்று இடம்பெற்ற அவரது மறைவுக்கு இதயப்பூர்வமான துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் போதாது என்றே கருதுகின்றது. அன்னார் அவர் ஒரு அழகான ஆன்மா , அன்பும் நம்பிக்கையும் நிறைந்தவர்.
இந்த அற்புதமான தம்பதிகள். பக்தி நெறி தவறாமல் வாழ்ந்து ஒரே வாரத்தில் எம்மை விட்டு நீங்கிச் சென்றமை எம்மை ஆழத் துயலில் மூழ்கடித்துள்ளது. அன்பும் பண்பும் கொண்ட தம்பதியினர் ஆன்மீக வழியிலும் நெறி தவறாமல் வாழ்ந்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்குத. இந்த இணையரின் மறைவுச் செய்தி கேட்டு பல வழிகளிலும் ஆறுதல் கூறியவர்கள் உதவிகள் புரிந்தவர்கள், நேரடியாக எமது இல்லம் தேடி வந்து அருகில் இருந்து துயரைப் பகிர்ந்தவர்கள் உட்பட அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
இங்ஙனம்:
கார்த்திகேசு யோகராஜா
(சகோதரரும், மைத்துனரும்)
தொலைபேசி இலக்கம்: (416) 451–5774