இலங்கையின் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக நிர்வாக சேவையின் உயர் அதிகாரியான சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படவுள்ளார் என்ற செய்தி தற்போது இலங்கைத் தலைநகர் அரச நிர்வாக மட்டத்தில் பேசப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
இதற்கு காரணம் வடமாகாணத்தின் தற்போதைய ஆளுநர் திருமதி PSM சாள்ஸ் எதிர்வரும் வாரத்தில் பதவியிலிருந்து விலகவுள்ளதாக கசிந்துள்ள செய்தியே ஆகும்.
இந்நிலையில் அவரது வெற்றிடத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக உள்ள சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறதாகவும் கூறப்படுகின்றது.
சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் , யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தின் பல்வேறு இடங்களில் பல சந்தர்ப்பத்திலும் மாட்ட செயலாளராகவும் ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரியாகவும் பதவிவகித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.