யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையும் ,நன்னிலை மையமும் இணைந்து நடாத்தும் “இளையோர் உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளினாலான உரையரங்கம் இடம்பெறவுள்ளது.
நாளை 26-09-2021 SUNDAY மாலை 7.00 மணிக்கு இடம்பெறும் இந்நிகழ்வு சர்வதேச ரீதியில் இணையவழியூடாக இடம்பெறவுள்ளது.
இவ்வுரையாடலானது 33ஆவது வாரமாக சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ந. சிவகரன் ஒருங்கிணைப்பிலும் தலைமையிலும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வானது, மெய்யியல் துறை மாணவர்கள் உள்ளிட்ட ஏனைய துறையில் கற்றுவரும் மாணவர்களினாலும் நம் நாட்டில் நடைபெறுகின்ற சமகாலப் பிரச்சினைகளை மையப்படுத்தியதாகவும் அப்பிரச்சினைகளை மெய்யியல் கருத்துக்களோடு தொடர்புபடுத்தியும் மெய்யியல் ரீதியான சிந்தனையை மையப்படுத்தியதாகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலமையாளார்களும், பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து இவ்விணையவழி நிகழ்வினை சிறப்பித்துக் கொண்டு இருக்கின்றனர்.
மேலும் இவ்வாரம் இடம்பெறும் இந்நிகழ்வில் சர்வதேச ரீதியில் பல மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். உலகக் குடிமகனாக எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பில் ஜே. மிதுனி சாகா (மெய்யியல் துறை, களனிப் பல்கலைக்கழகம்), ஆக்கபூர்வ சிந்தனை மற்றும் எவ்வாறு யோசனையை உருவாக்குகிறது என்பது தொடர்பில் ஏ.எம். பாத்திமா இஃப்ரத் நுஹா( முதலாம் வருடம், அக்டிவ் சிட்டிசன், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்), (முதலாம் வருடம், கணினி தகவல் தொழினுட்ப துறை, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்) புதிய தொழில்நுட்பங்களை சமாளிப்பது என்பது தொடர்பில் ஆர். ஜோஷிகா, மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் தொடர்பில் வி. வித்தியாஷினி (இரண்டாம் வருடம்,பொதுநலத் துறை, ஆசியன் பல்கலைக்கழகம் பங்களாதேஷ்) தலைப்புகளில் பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக அவுஸ்ரேலியாவின் எம்.ஏ. மொனாஷ் பல்கலைக்கழகத்தின் அவுஸ்திரேலிய விருது பெற்ற பேராசிரியர் த்ரிஷ்யா குருங் கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றினால் சமூகத்தின் பல்வேறு கட்டமைப்புகளும் முடக்கம் கண்டிருக்கும் தற்போதைய சூழலில், நேரடியாக பங்கேற்க முடியாத சந்தர்ப்பத்திலும், இணைய வழியாக Zoom செயலி ஊடாக இந்நிகழ்வானது மக்களின் மத்தியில் பலத்த ஆதரவைப் பெற்று இவ்வாரமும் நடைபெறுகின்றது.
இந்த உரையரங்கில் கலந்து கொள்ள
Meeting ID: 631 0629 9899
passcode: Youth@2021