(மன்னார் நிருபர்)
(27-09-2021)
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் பிரதேச வைத்தியசாலை சிற்றூழியர்கள் இன்று (27) காலை பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை (27) காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணிவரை குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தாதியர் சங்கத்தினர், பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்டத்தில் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பணிப்பகிஸ்கரிப்பானது 8 கோரிக்கைகளை உள்ளடக்கி இடம் பெற்றது.
இதனால், இன்று காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.