(27-09-2021)
நீர்ப்பாசன சுபீட்சத்தின் எதிர்கால நோக்கு வேலை திட்டத்தின் கீழ் அநுராதபுர மாவட்டத்திலுள்ள 200 குளங்கள் புனரமைப்பு செய்யப்படுகின்றன. இதில் 50 குளங்களின் வேலைகள் முடியும் தருவாயில் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாவட்டத்திலுள்ள 200 குளங்களினதும் புனரமைப்பு பணிகள் நிறைவுற்றதும் மேலதிகமாக 02 ஆயிரம் ஏக்கர் காணிகளில் விவசாயச் செய்கையை மேற் கொள்ளும் வாய்ப்பு விவசாயிகளுக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக அரசாங்கம் 02 ஆயிரம் மில்லியன் ரூபாய் பணத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அநுராதபுர மாவட்டத்திற்குள் சுமார் 3300 சிறிய குளங்கள் இருப்பதும் எதிர் காலத்தில் அவை முன்னுரிமை அடிப்படையில் புனரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதோடு, இதன் கீழ் மாவட்டத்தில் எல்லா பிரதேசங்களிலும் வருடத்தின் இரண்டு போகங்களிலும் நெற் செய்கையை மேற் கொள்ளவும்,மேலதிக பயிர் செய்கையில் ஈடுபடவும் விவசாயிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.