(27-09-2021)
பதுளை மாவட்டம், ரிதிமாலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகுலேமட பிரதேசத்தில் கட்டுத்துவக்கு வெடித்ததில் சேனையொன்றில் பணிப்புரிந்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், பரிதாபகரமாக மரணமடைந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
மகுலேமட, ரிடிகஹஅராவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபரே உயிரிழந்துள்ளார்.
கட்டுத்துவக்கைக் கைப்பற்றியுள்ள பொலிஸார் அதனைச் செயற்படுத்தியவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் ரிதிமாலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.