யாழ்ப்பாணம் அளவெட்டி சிறுவிளான் கிராயட்டியைப் பிறப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்து வந்தவருமான ‘ஈழத்து இசைவாருதி’ கர்நாடக இசை மற்றும் மிருதங்கக் கலைஞர் வர்ண இராமேஸ்வரன் அவர்கள் கனடாவில் காலமானார் என்ற செய்தியை எமது வாசக அன்பர்களோடும் அவரை நேசித்த இசை ரசிகர்களோடும் பகிர்ந்து கொள்கின்றோம்.
கனடாவில் ‘ வர்ணம் இசைக் கல்லூரி’ ‘வர்ணம் கிரியேஷன்ஸ்’ அசை சார்ந்த நிறுவனங்களை நடத்தி வந்த வர்ண ராமேஸ்வரன் அவர்கள் வாய்ப்பாட்டு மற்றும் மிருதங்கம் ஆகிய துறைகளில் ஒரு வித்தகராகத் திகழ்ந்தார்.
தாய் மண்ணின் விடுதலை சார்ந்த இசைப் படைப்புகளை தயாரித்து வெளியிடுவதில் முன்னின்று உழைத்த இவர் கவிஞர் புதுவை இரத்தினதுரையோடு ‘ தமிழ்க் கலை பண்பாட்டு இயக்கத்தின்’ பல தயாரிப்புக்களில் தனது பங்களிப்பை வழங்கியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் பூதவுடல் அக்டோபர் மாதம் 10ம் திகதி மாலை 6.00 மணி தொடக்கம் 9.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பெற்று அடுத்த நாள் திங்கட்கிழமை தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு இலங்கை வாழ் அமரரின் நண்பர் நிரோஜன் அவர்களை 94770879130 என்னும் இலக்கத்திலும் கனடா வாழ் உறவினர் ரமணீகரன் அவர்களை 647 865 7972 என்னும் இலக்கத்திலும் தொடர்பு கொள்ளலாம்.