(மன்னார் நிருபர்)
(29-09-2021)
நாடு பூராகவும் சமுர்த்தி சௌபாக்கியா வாரம் 3 ஆம் கட்ட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வேலைத்திட்டம் இன்றைய தினம் புதன் கிழமை (29) மன்னார் மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சமுர்த்தி சௌபாக்கியா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இன்று புதன் கிழமை (29) மாலை குறித்த வேளைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் டெனிசியஸ் கனியூட் அரவிந்தராஜ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.காதர் மஸ்தான் கலந்து கொண்டார்.
இதன் போது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 47 பயணாளிகளுக்கு வீட்டுத்திட்டத்திற்கான காசோலை,வீட்டு தோட்டத்திற்கான தெண்ணங்கண்று வழங்குதல், இடம் பெற்றதோடு,சமுர்த்தி சங்கத்தினை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் கிராம அலுவலர்கள், என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் நானாட்டான் மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் குறித்த வேலை திட்டம் நடைமுறைப்படுத்த பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.